#021. மங்கலை, செங்கலசம்

# 21. காட்சியில் களித்தேன்!

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில், தாவு கங்கை  

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண் கொடியே.

தீர்க்க சுமங்கலி; செப்புக் கலசம் போன்ற நகில்களை உடையவள்; மலை அரசனின் மகள்; வெண் சங்கு வளை அணிந்த சிவந்த கரங்களை உடையவள்; கலைகளின் தெய்வமாகிய அழகு மயில்; பொங்கும் அலை தவழும், கங்கை நதி தங்கும், சடையுடைய சிவபிரானின் உடலின் இடப்பாகத்தில் உள்ளவள்; என்னைத் தன் உடைமையாகக் கொண்டவள்; காவிரியாகவும், துர்கையாகவும், அலைமகளாகவும், கலைமகளாகவும், மலைமகளாகவும் திகழ்பவள் அவளே!