#073. தாமம் கடம்பு

# 73. தியானமுறை 

தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக்கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்றுவைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளிச் செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.

அம்பிகையின் பெயர் திரிபுர சுந்தரி; அவள் கண்கள் மூன்று; அழகிய கைகள் நான்கு; மேனியின் நிறம் சிவப்பு;
மாலை கடம்ப மலர்களால்; படைக்கலங்கள் என்பன ஐந்து மலர்க்கணைகள்; வில் ஒரு கரும்பு; வழிபட ஏற்ற நேரம் பைரவர் காவல் புரியும் நள்ளிரவு; அவள் நமக்காக வைத்துள்ள செல்வம் அவள் திருவடிகளே!