#039. ஆளுகைக்கு உந்தன்

# 39. என் குறையே!

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன் பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு; மேலிவற்றின்
மூளுகைக்கு, என் குறை நின் குறையே அன்று! முப்புரங்கள்
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே!

முப்புரங்களை அழிப்பதற்கு அம்பு எய்த வில்லாளனாகிய சிவபிரானின் இடப் பக்கம் உறையும் தேவியே! என்னை ஆள்வதற்கு உன் திருவடித் தாமரைகள் உள்ளன. யமனிடமிருந்து மீட்பதற்கு உன் கடைக்கண்கள் உள்ளன. இவற்றின் மீது என் கருத்தைச் செலுத்தாதது என் குறையே அன்றி உன் அருளின் ஏற்பட்ட குறை அன்று!