#047. வாழும்படி ஒன்று

# 47. சொற்களுக்கு அப்பாற்பட்டது.

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று; விள்ளும் படி அன்று; வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும்; எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

யான் இன்ப வாழ்வு வாழ்வதற்கு ஒரு சக்தியை கண்டு கொண்டேன். அது மனத்தால் ஒருவர் எளிதாகப் பற்றி விடக்கூடியது அல்ல. எடுத்துக் கூறவும் இயலாது. அது கடல் சூழ்ந்த ஏழு உலகங்களுக்கும், எட்டு மலைகளுக்கும் எட்டாமல்; இரவு, பகல் உண்டாக்கும் சுடர்களுக்கு இடையே பொருந்தி ஒளி வீசுகின்றது.