#060. பாலினும் சொல்

# 60. என்னே நின் அருள்!

பாலினும் சொல் இனியாய்! பனிமா மலர்ப் பாதம் வைக்க, 
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே?

பாலினும் இனிய சொல் உடையவளே! திருமாலும், மற்ற தேவர்களும் வணங்கும் சிவபிரானது கொன்றை சூடிய சடையையும் , அவன் பாதங்களின் கீழ் நின்று வேதங்கள் ஓதும் மெய்ப்பீடங்கள் நான்கையும் விடவும், உன் பனிமலர்ப் பாதங்களை வைத்தருள, நாயேன் என்னுடைய தலை சிறந்ததாக ஆயிற்றோ? எனில் என்னே உன் அருள்!