#091. மெல்லிய நுண் இடை

# 91. இந்திரப் பதவி கிட்டும்.

மெல்லிய நுண் இடை மின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊரும் பதம் தருமே.

மின்னலை ஒத்த மெல்லிய இடை உடையவளை, விரிசடைக் கடவுளாகிய சிவ பெருமான் தொழும் மெல்லிய நகில்களை உடையவளை,  நான்கு மறைகள் சொல்லிய வண்ணம் தொழும் அடியவர்களைத் தொழும் அடியவர்களுக்கு,  பல்வகை இசைக் கருவிகளின் முழக்கத்தோடு கூடின,  வெள்ளை யானை மீது பவனி வரும் இந்திரப் பதவி கிட்டும்.