2. ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்துதி

c2

ஸ்ரீமச் சந்த3ன சர்ச்சிதோஜ்வலவபு: சு’க்லாம்ப3ர மல்லிகா
மாலாலாலித குந்த3ளா ப்ரவிலஸன் முக்தாவளி சோ’ப4னா |
ஸர்வஜ்ஞான நிதா3ன புஸ்தகத4ரா ருத்ராக்ஷ மாலாங்கிதா
வாக்3தே3வி வத3நாம்பு4ஜே வஸதுமே த்ரைலோக்யமாதா சு’பா4 ||(2)

சந்தனக் கலைவையினால் ஜொலிக்கும் சரீரத்தை உடையவள்; மல்லிகை மாலை சூடிய கூந்தலை உடையவள்; பிரகாசிக்கும் முத்து மாலைகளால் அழகு பெற்றவள்; எல்லா அறிவையும் அளிக்கும் புத்தகங்களை ஏந்தியவள்; ருத்திராக்ஷ மாலையை அணிந்தவள்; அழகிய வடிவினை உடையவள்;
மூன்று உலகங்களுக்கும் தாய்; வாக்குக்கு ஈஸ்வரி ஆகிய சரஸ்வதி அன்னை என் முக கமலத்தில் வசிக்க வேண்டும்.

Leave a comment