#030. அன்றே தடுத்து என்னை

# 30. எல்லாம் உன் கடமை.

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய்! கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செய்யினும், நடுக்கடலுள்
சென்றே வீழினும், கரை ஏற்றுகை நின் திருவுளமே!
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே!

ஓர் உருவமாகவும், பல உருவமாகவும், அருவமாகவும் திகழும் உமை அன்னையே! என்னை நீ என்றோ தடுத்து ஆடக்கொண்டு விட்டாய். அதனை மறப்பது உனக்கு நன்றாகுமா? இனி நான் என்ன பிழை செய்தாலும் பொறுப்பதும், கடலின் நடுவே சென்று நான் வீழ்ந்தாலும் என்னைக் கரை ஏற்றுவதும் உன் கடமையே!