#033. இழைக்கும் வினைவழியே

# 33. அபயம் அருள்வாய்!

இழைக்கும் வினை வழியே அடும்காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து ‘அஞ்சல்’ என்பாய்! அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
உழைக்கும்பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

எம்பெருமானின் உள்ளதையெல்லாம் உருக்கும் நறுமணமும், எழில் நகில்களும் கொண்ட மெல்லியலாளே! நான் செய்த வினைகளின் பயனாக, நான் நடுங்கும்வண்ணம், எமன் என்னை அழைக்கும் போது, உன்னைச் சரண்புகுவேன். “அஞ்சேல்!” என்று நீ எனக்கு அபயம் அளிக்க வேண்டும்.