1. ஸ்ரீ லக்ஷ்மி ஸ்துதி

b1

லக்ஷ்மீம் க்ஷீர ஸமுத்3ர ராஜதனயாம் ஸ்ரீ ரங்க3 தா4மேச்’வரீம்
தா3ஸீ பூ4த ஸமஸ்த தே3வ வநிதாம் லோகைக தீ3பங்குராம் |
ஸ்ரீமன் மந்த3 கடாக்ஷ லப்3த விப4வ ப்3ரம்மேந்த்3ர க3ங்கா3த4ராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பி3நீம் ஸரஸிஜாம் வந்தே3 முகுந்த3ப்ரியாம் || (1)

நீ க்ஷீர சமுத்திரராஜனின் அருமைப் புதல்வி; நீ ஸ்ரீ ரங்க க்ஷேத்திரத்தின் தலைவி; தேவ மாதர்கள் உன் அடிமைகள்; நீ உலகின் ஒளி விளக்கு; பிரமன், இந்திரன், ருத்திரன் போன்றவர்கள் உன் மந்த கடாக்ஷத்தால் ஐஸ்வர்யங்களை அடைகின்றனர் ; மூவுலகின் தலைவி நீ; தாமரை மலரில் அமர்பவள் நீ; முகுந்தனுக்கு பிரியமானவள் நீ. உன்னை நான் வணங்குகின்றேன்.

Leave a comment