#056. ஒன்றாய் அரும்பி

# 56. அருளின் அருமை என்னே!

ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய்,
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் எந்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலியையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

ஒரே பராசக்தி பல சக்திகளாகப் பிரிந்தும், விரிந்தும், இவ்வுலகம் எல்லாம் நிறைந்து நிற்பாள். அனைத்தையும் நீங்கியும் நிற்பாள். அத்தகைய சக்தி என் நெஞ்சில் நீங்காது நின்று அருள் புரிகின்றாள். ஆலிலைமேல் துயிலும் ஹரியும், எம்பெருமானான ஹரனும் இந்த உண்மையை நன்கு அறிவார்கள்.