#071. அழகுக்கு ஒருவரும்

# 71. என்ன குறை?

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே! இரங்கல், உனக்கு என்குறையே?

பிறவியின் பயனை இழந்து நிற்கும் மனமே! எவருமே இணை ஆகாத அழகின் கொடியாக, எப்போதும் வேதங்களால் வருடப் பட்டு சிவந்த நிறம் கொண்ட சீரிய தாமரை அடிகளும், குளிர்ந்த இளம் பிறை சூடிய முடியும், மேன்மையும், பசுமையும் வாய்ந்த அபிராமி துணையாக இருக்கும்போது உனக்கு என்ன குறை கூறு!