#076. குறித்தேன் மனத்தில்

# 76. மறலி வழி தடுத்தேன்.

குறித்தேன் மனத்தில், நின் கோலமெல்லாம்; நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாணி பைரவியே.

வண்டுகள் துளைப்பதால் தேனைச் சிந்தும் கொன்றை மலர்களைச் சூடிய சிவபெருமானின் இடப் பக்கம் இடம் பெற்ற, ஐந்து மலர்க்கணைகளை உடைய தேவியே! உன் அழகிய வடிவினைத் தியானம் செய்து, உன் உள்ளக் குறிப்பு அறிந்து கொண்டு, மறலி வருகின்ற வழியை நேராகத் தடுத்து விட்டேன்.