#053. சின்னஞ் சிறிய

# 53. சிறந்த தவம்.

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யப் பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங் கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது
 போலும் தவம் இல்லையே!

தேவியின் சிற்றிடையில் சாத்தப்பட்ட சிவந்த பட்டாடையையும், மிகப் பெரிய நகில்களையும், முத்து மாலைகளையும், பிச்சிப்பூ சூடிய கரிய கூந்தலையும், மூன்று கண்களையும் சிந்தையில் நிலை நிறுத்தித் தன்னந் தனியாக இருப்பவர்களுக்கு; இதைக் காட்டிலும் சிறந்த தவம் என்று எதுவும் இல்லையே!