#097. ஆதித்தன், அம்புலி

# 97. அன்னையைப் போற்றுபவர்கள் 

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தம்கோன்,
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன் , கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

சூரியன், சந்திரன், அக்னி தேவன், குபேரன், இந்திரன், நான்முகன், சிவபிரான், திருமால், பொதிய முனி அகத்தியர்,  வேற்படை கொண்ட முருகன், கணபதி, மன்மதன் முதலான  எண்ணற்றவர்கள் அபிராமி அன்னையைப் போற்றுவர்.