#100. குழையத் தழுவிய

#100. நெஞ்சில் நிலவும்!

குழையத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கை வல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண்நகையும்
உழையைப் பொரு கண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.

குழையும்படித் தழுவிய சிவபெருமானுடைய கொன்றை மலர் மாலையின் மணம் கமழும் ஸ்தனங்களை உடைய அபிராம வல்லியின் மூங்கிலை வெல்லும் நீண்ட தோள்களும், கரும்பு வில்லும், அழகிய மலர்க்கணைகளும், வெண் புன்னகையும் மானின் விழிகளை வெல்லும் கண்களும் என் உள்ளத்தில் தோன்றுகின்றன.