#099. குயிலாய் இருக்கும்

# 99. அன்னையின் தன்மை. 

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை; கோலவியல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை ; வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின்மீது அன்னம் ஆம்;
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே!

கயிலாய நாதனுக்கு இமவான் அளித்த பருத்த குழையுடைய அபிராமி அன்னை, கடம்ப வனத்தில் குயிலாக விளங்குபவள்; இமய மலையில் அழகிய மயிலாக விளங்குபவள்; வானத்தில் கதிரவனாகவும், தாமரையின் மீது அன்னம் ஆகவும் விளங்குபவள்.