தேவர்களின் ஸ்துதி (2)

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்3த்யை ஸித்3த்4யை குர்மோ நமோ நம : |
நைர்ருத்யை பூ4ப்4ருதாம் லக்ஷ்ம்யை ச’ர்வாண்யை தே நமோ நம : || (11)

சரணமடைந்தோருக்கு எல்லா நலன்களுமாகத் தானே ஆகியவளுக்கும், வளர்ச்சியும் வெற்றியும் ஆகியவளுக்கும், மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரம். புவியாளும் அரசருக்கு அலக்ஷ்மியும் லக்ஷ்மியும் ஆகும் சிவனின் பத்தினிக்கு மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரங்கள்.

து3ர்கா3யை துர்க3பாராயை ஸாராயை ஸர்வகாரிண்யை |
க்யாத்யை ததை2வ க்ருஷ்ணாயை தூ4ம்ராயை ஸததம் நம: || (12)

கஷ்டங்களைக் கடக்க உதவும் துர்க்கை வடிவினளும், அனைத்தின் சாராம்சம் ஆனவளும், அனைத்தயுமே ஆக்குபவளும், கியாதி வடிவினளும், கரிய நிறத்தவளும், புகை வடிவினளும் ஆன தேவிக்கு என்றென்றும் நமஸ்காரம்.

Leave a comment