#059. தஞ்சம் பிறிது இல்லை

# 59. என் அன்னை நீயே!

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்; ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.

நீண்ட கரும்பு வில்லையும், ஐந்து பாணங்களையும் உடைய தேவியே! உன்னைத் தஞ்சம் புகுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று உன் தவநெறி பழக எண்ணினேன். பஞ்சினை மிதிக்கவும் அஞ்சுகின்ற மென் பாதங்களை உடைய பெண்கள், தாம் பெற்ற பிள்ளைகள் குற்றம் செய்தாலும் தண்டிக்க மாட்டார்கள் அல்லவா?