#087. மொழிக்கும் நினைவுக்கும்

# 87. எளிவந்த கருணை.

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால், விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை, அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே!

நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து அழித்த இறைவனுடைய அழியாத விரதத்தை மாற்றி, எல்லா அண்டத்தவர்களும் பழிக்கும்படியாக அவன் இடப் பாகத்தில் உறைந்து, உலகை ஆளும் தேவியே! வாக்கிற்கும், மனதுக்கும் எட்டாத உன் திருவடிவம், என் கண்களுக்கும் வழிபாட்டுக்கும் ஏற்றதாக உள்ளது. உன் எளி வந்த கருணை என்னே!