தேவியின் உறுதி மொழி (22)

# 42.

நந்த3கோ3ப க்3ருஹே ஜாதா யசோ’தா3 க3ர்ப்ப4 ஸம்ப4வா |
ததஸ்தௌ நாச’யிஷ்யாமி விந்த்4யாசல நிவாஸிநீ ||

யசோதையின் கர்ப்பத்தில் தோன்றி, நந்தகோபர் இல்லத்தில் பிறந்து, விந்தியாசலத்தில் வசிக்கப்போகும் நான், அப்போது அந்த அசுரர்களை நாசம் செய்யப்போகின்றேன்.

# 43

புனரப்யதிரௌத்3ரேண ரூபேண ப்ருதிவீதலே |
அவதீர்ய ஹநிஷ்யாமி வைப்ரசித்தாம்ஸ்து த3னவான் ||

மீண்டும் பூலோகத்தில் மிகவும் பயங்கரமான வடிவில் அவதரித்து,
வைப்ரசித்தர்கள் என்னும் அசுரர்களையும் நாசம் செய்வேன்.

# 44

ப4க்ஷயந்த்யாச்’ச தானுக்3ரான் வைப்ரசித்தான் மஹாஸுரான் |
ரக்த த3ந்தா ப4விஷ்யந்தி தா3டி3மீ குஸுமோபமா : ||

மிகவும் கொடிய அசுரகள் ஆகிய அந்த வைப்ரசித்தர்களை நான் உண்ணும் போது, என்னுடைய பற்கள் மாதுளம் பூவைப் போன்று சிவந்து காணப்படும்.

Leave a comment