#070. கண்களிக்கும்படி

# 70. கண்டு களித்தேன்.

கண்களிக்கும்படிக் கண்டு கொண்டேன்; கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும், கையும், பயோதரமும்,
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே.

கடம்ப வனமாகிய மதுரையில்; பண்களை மகிழ்விக்கும் இனிய இசையை உடைய வீணையும், கையும், அழகிய தனங்களும், மண்ணுலகத்தினரை மகிழ்விக்கும் பச்சை நிறமும் கொண்ட பெண்ணாக, மதங்கர் குலத்தில் தோன்றிய, நம் பெருமாட்டியின் பேரழகை என் கண்கள் களிக்கும்படி நன்கு கண்டு கொண்டேன்.