#036. பொருளே! பொருள்

# 36. அருளின் இயல்பு என்ன?

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது! அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே!

செல்வமே! செல்வத்தினால் விளையும் போகமே! போகத்தினால் ஏற்படும் மயக்கமே! மயக்கத்தில் ஏற்படும் தெளிவே! தாமரை மலர்ப் பீடத்தில் அமர்ந்து இருக்கும் அம்பிகையே! என் மனதில் வஞ்சமாகிய மாயையின் இருள் சற்றும் இல்லாதபடி, ஒளி வெளி ஆகி இருக்கும், உன் திருவருளின் தன்மை என்ன என்று சிறிதும் எனக்குத் தெரியவில்லையே!