#037. கைக்கே அணிவது

# 37 . அன்னையின் அணிகலன்கள்.

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும், எட்டு
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே!

எட்டு திசைகளையே ஆடையாக அணியும் எம்பெருமானுடன் இணைந்தவளே! உன் கைகளில் கரும்பு வில்லும், மலர்க்கணையும் அணிந்துள்ளாய். தாமரை மலர் போன்ற உன் மேனியில் நீ அணிவது வெண் முத்துமாலை. பாம்பின் படம் போன்ற இடையின் மீது பல மணிகள் இழைத்த மேகலையையும், பட்டாடையும் அணிந்துள்ளாய்.