தேவியின் உறுதி மொழி (6)

தேவி ஸ்துதி (பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது).

# 9.

கலா காஷ்டாதி3ரூபேண பரிணாம ப்ரதா3யினி |
விச்’வஸ்யோபரதௌ ச’க்தே நாராயணீ நமோஸ்துதே ||

கலை வடிவிலும், காலத்தின் அளவாகிய காஷ்டை முதலிய வடிவங்களிலும் இருந்து கொண்டு,
மாற்றங்களை ஏற்படுத்தி, உலகின் ஒடுக்கத்துக் காரணசக்தியாக இருக்கும் நாராயணிதேவியே நமஸ்காரம்.

# 10.

ஸர்வமங்க3ள மாங்க3ல்யே சி’வே ஸர்வார்த்த2 ஸாதி4கே |
ச’ரண்யே த்ரயம்ப3கே கௌ3ரி நாராயணீ நமோஸ்துதே ||


எல்லா மங்கலப் பொருட்களின் மங்களமாகத் திகழ்பவளே!
எல்லா நன்மைகளையும் தருபவளே!
எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றுபவளே!
சரணம் அடைவதற்கு தகுந்தவளே!
மூன்று நயனங்களை உடையவளே!
நாராயணீ தேவியே ! நமஸ்காரம்.

Leave a comment