அர்க்க3லா (21 and 22)

AA

தே3வி! ப4க்த ஜனோத்3தா3ம த3த்தானந்தோ3த3யேம்பி3கே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 21

தேவி! பக்தர்களுக்கு பரமானந்தத்தின் மூலமான முக்தியை அளிப்பவளே!அம்பிகையே! நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

பத்னீம் மனோரமாம் தே3ஹி மனோவ்ருத்தானுஸாரிணீம் |
தாரிணீம் து3ர்க3 ஸம்ஸார ஸாக3ரஸ்ய குலோத்3ப4வாம் || 22

மனதுக்கு இனியவளாகவும், மனதின் போக்கை அறிந்து நடந்து கொள்ளுபவளாகாவும், கடப்பதற்கு அரிய ஸம்சார சாகரத்தைக் கடக்க உதவுபவளாகவும், நல்ல குலத்தில் உதித்தவளும் ஆகிய மனைவியை அளிப்பாய்.

ப2லஸ்ருதி:

இத3ம் ஸ்தோத்ரம் படி2த்வா து மஹாஸ்தோத்ரம் படே2ன் நர: |
ஸ து ஸப்த ச’தி ஸங்க்2யா வர மாப்நோதி ஸம்பத3: ||

இந்த ஸ்தோதிரத்தைப் படித்த பிறகே தேவி மாஹாத்மியத்தைப் படிக்க வேண்டும்.
அதனால் சிறந்த பலன் கைக்கூடும், சகல சம்பத்தும் கிடைக்கும்.

இதி ஸ்ரீ மார்கண்டே3ய புராணே அர்க்க3லா ஸ்தோத்ரம் ஸமாப்தம்.

Leave a comment