தேவர்களின் ஸ்துதி (3)

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

அதிஸௌம்யாதி ரௌத்3ராயை நாதாஸ் தஸ்யை நமோ நம : |
நமோ ஜக3த்ப்ரதிஷ்ட்டா2யை தே3வ்யை க்ருத்யை நமோ நம : || (13)

இனிய வடிவினை உடையவளும், பயங்கர வடிவினை உடையவளும் ஆகிய தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். உலகின் ஆதாரமாகவும், உலகின் இயக்கமாகவும் உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வ பூ4தே ஷு விஷ்ணு மாயேதி ச’ப்3தி3தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : || (14 -16 )

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் விஷ்ணு மாயை என்று கூறப்படுகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

Leave a comment