#063. தேறும்படிச் சில

# 63. நீயே தலைவி!

தேறும்படிச் சில எதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறிக்குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறு சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே!

ஆறு சமயங்களுக்கும் ஒரே தலைவியாக இருப்பவள் அன்னை அபிராமியே என்று அறிந்து இருந்த போதிலும், வேறு சமயங்கள் உள்ளன என்று கூறும் வீணர்களுக்கு; அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி எடுத்துக் கூறுவது என்பது ஒரு மலையைக் குறுந்தடியால் உடைக்க முற்படுவதற்குச் சமம் ஆகும்.