#052. வையகம், துரகம்

# 52. அடியவர் சின்னங்கள்.

வையகம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை,
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

பிறை சூடிய பிரானின் திருமனையாளின் திருவடித் தாமரைகளுக்கு முற்பிறவியில் அன்பு செய்தவர்களுக்கு, இப்பிறப்பில் தேர், குதிரை, மத யானை, திருமுடி, பல்லக்கு, பொன், அணிகலன்கள் முதலான எல்லா நலன்களும் சின்னங்களாக அமையும்.