#051. அரணம் பொருள் என்று

# 51. அடியவர்கள் பெரும் பயன்கள்.

அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
‘சரணம், சரணம்’ என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.

இரக்கம் என்பதே இல்லாத அசுரர்களுடைய திரிபுரத்தை எரிக்கச் சினம் கொண்டு முனைந்த சிவபெருமானும், முகுந்தனும் வணங்குகின்ற தேவியின் திருஅடியவர் பிறப்பு, இறப்பு என்னும் இரண்டையும் இவ்வுலகில் அடையமாட்டார்கள்.