#066. வல்லபம் ஒன்று

# 66. உன் திருநாமங்கள்!

வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன்; பசும் பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்று இருப்பாய்! வினையேன் தொடுத்த
சொல் அவம் ஆயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.

பசும்பொன் மலையை வில்லாகக்கொண்ட சிவனுடன் வீற்று இருப்பவளே! உன் ஆற்றல் எதனையும் சிறியேன் நான் அறியேன். ஆயினும் உன் சிவந்த மலர்ப் பாதங்களைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் எனக்கு இல்லை. தீவினையுடையவனான நான் தொடுத்த சொல்மாலை பயனற்றதாகயிருந்தாலும் அதில் உள்ள உன் நாமங்கள் நல்ல தோத்திரமாகும் அல்லவா?