#054. இல்லாமை சொல்லி

# 54. ஆற்றுப்படுத்துதல்.

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்,
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒருகாலத்திலும்,
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

ஒருவரிடம் சென்று தன் வறுமையை எடுத்துக்கூறி இழிவுபட்டு நிற்காமல் இருக்க நீங்கள் விரும்பினால்; தவம் செய்யக் கல்லாத கயவர்களிடம், ஒருபோதும் நான் செல்லாமல் என்னைக் காத்து அருளிய, திரிபுரசுந்தரியின் திருவடிகளைச் சரண் அடையுங்கள்.