#062. தங்கச் சிலை கொண்டு

# 62. என் சிந்தையில் நீயே!

தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன்,மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங்கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையே.

தங்கமலையான மேருவினையே வில்லாக வளைத்த, முப்புரத்தையும் அழித்த, மத யானையின் தோலைப் போர்த்தியுள்ள, சிவபெருமானின் திருமேனியைச் சேர்ந்து; குரும்பை போன்ற நகில்களால் குறியிட்டருளிய தேவியின் கைகளில் உள்ள கரும்பு வில்லும், மலர்க்கணைகளும் எப்போதும் என் சிந்தையில் நிலை பெற்று இருக்கும்.