3. ஸ்ரீ லக்ஷ்மி ஸ்துதி

b3

யா ஸா பத்3மாஸனஸ்தா விபுல
கடி தடீ பத்3ம பத்ராயதாக்ஷி
க3ம்பீ4ரா வர்தனாபி4: ஸ்தனப4ர
நமிதா சு’ப்ர வஸ்த்ரோத்தரீயா |
லக்ஷ்மீர் தி3வ்யைர் க3ஜேந்த்3ர
மணிக3ண க2சிதை: ஸ்நாபிதா ஹேமகும்பை3:
நித்யம் ஸா பத்3மஹஸ்தா மம
வஸ்து க்3ருஹே ஸர்வ மாங்க3ல்யயுக்தா || (3)

எந்த லக்ஷ்மிதேவி புதிதாக மலர்ந்த தாமரையில் அமர்ந்தவளோ, அழகிய விஸ்தாரமான இடுப்புப் பிரதேசத்தை உடையவளோ, தாமரை இதழை போன்ற அழகிய நீண்ட கண்களை உடையவளோ, கம்பீரமானதும் வட்டவடிவினதும் ஆன அழகிய நாபியை உடையவளோ, ஸ்தனபாரத்தில் கொஞ்சம் உடல் வளைந்தவளோ, வெண் பட்டு உடுத்தவளோ, தேவர் உலகின் யானைகளால் ரத்தினம் பதித்த குடங்களின் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டவளோ, தாமரை மலரைக் கைகளில் எந்தியவளோ, அந்த மகாலட்சுமி என்னுடைய இல்லத்தில் சர்வ மங்கலையாக வாசம் செய்யட்டும்.

Leave a comment