தேவர்களின் ஸ்துதி(1)

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

தே3வா ஊசு: || (8)
நமோ தே3வ்யை மஹா தே3வ்யை சி’வாயை ஸததம் நம : |
நம: ப்ரக்ருத்யை ப4த்3ராயை நியதா: ப்ரணதாஸ்மதாம் || (9)

தேவர்கள் கூறியது:-
தேவிக்கு நமஸ்காரம். மஹா தேவிக்கு நமஸ்காரம். மங்கள வடிவினளுக்கு என்றென்றும் நமஸ்காரம். இயற்கை என்கின்ற வடிவானவளுக்கு நமஸ்காரம். மங்கள ஸ்வரூபிணியான அன்னையை அடக்க ஒடுக்கமாக நாங்கள் வழிபடுகின்றோம்.

ரௌத்3ராயை நமோ நித்யாயை கௌ3ர்யை தா4த்ர்யை நமோ நம:|
ஜ்யோத்ஸ்நாயை சேந்து3ரூபிண்யை ஸுகா2யை ஸததம் நம: || (10)

பயங்கர வடிவை உடைய தேவிக்கு நமஸ்காரம். நித்தியமானவளுக்கு நமஸ்காரம். கௌரிக்கு நமஸ்காரம். உலகையே தாங்குபவளுக்கு நமஸ்காரம். ஒளி வடிவானவளுக்கு நமஸ்காரம். சந்திரப்பிரபையை போன்ற தேவிக்கு நமஸ்காரம். இன்ப வடிவானவளுக்கு என்றென்றும் எங்கள் நமஸ்காரம்.

Leave a comment