1. ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்துதி

c0

யாகுந்தே3ந்து3 துஷாரஹார த4வளா யா ஸுப்3ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர த3ண்ட3மண்டி3தகரா யா ஸ்வேதபத்மாஸனா |
யா ப்3ரஹ்மாச்யூத ச’ங்கர ப்ரப்4ருதிபி4: தே3வைஸ்ஸதா3பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதி ப4க3வதி நிச்’சேஷ ஜாட்3யாபஹா || (1)

எந்த பகவதி மல்லிகை, சந்திரன், பனி இவற்றைபோன்ற முத்து மாலையை அணிந்தவளோ ; வெண் பட்டு உடுத்தியவளோ; வீணையை மீட்டும் அழகிய கரங்களை உடையவளோ; வெள்ளைத் தாமைரயில் வீற்று இருப்பவளோ; பிரமன், விஷ்ணு, சிவன் ஆகியோரால் பூஜிக்கப் படுபவளோ; அந்த சரஸ்வதி தேவி என் அறியாமையின் இருளை அகற்றி என்னை காத்தருளவேண்டும்.

Leave a comment