தேவியின் உறுதி மொழி (7)

# 11.
ஸ்ருஷ்டி ஸ்தி2தி வினாசா’னாம் ச’க்திபூ4தே ஸநாதனி |
கு3ணாச்’ரயே கு3ணமயே நாராயணீ நமோஸ்துதே ||

ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் என்னும் மூன்று தொழில்களுக்கும் காரண சக்தியானவளே! என்றும் இருப்பவளே! எல்லா குணங்களின் இருப்பிடம் ஆனவளே! குணங்களையே உன் வடிவாகக் கொண்டுள்ளவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

# 12.
ச’ரணாக3த தீ3னார்த்த பரித்ராண பராயணே |
ஸர்வஸ்யார்த்தி ஹரே தே3வி நாராயணீ நமோஸ்துதே ||

உன்னைச் சரணம் அடைந்த தீனர்களையும், துன்பத்தில் உழல்பவர்களையும் காப்பாற்றுவதையே உன் தொழிலாகக் கொண்டுள்ளவளே! எல்லோர் துயரையும் துடைப்பவளே! நாராயணீ தேவியே! நமஸ்காரம்.

Leave a comment