#065. ககனமும், வானும்

# 65. வல்லபம் தான் என்னே!

ககனமும், வானும், புவனமும் காண, விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி; நீ செய்த வல்லபமே.  

அபிராம வல்லியே! உன் வல்லபத்தால் அண்ட சராசரங்கள் அனைத்தும் காணும்படியாக, முன்பு மன்மதனைத் தகனம் செய்த சிவபெருமானுக்கு, பன்னிரு கரங்களும், ஆறு சிவந்த முகங்களுமுடைய அறிவின் மைந்தன் தோன்றினான் அல்லவா?