#080. கூட்டியவா என்னை

# 80. ஆனந்தக் களிப்பு.

கூட்டியவா, என்னைத் தன் அடியாரில், கொடியவினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்டகண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!

தங்கத் தாமரையில் விளங்கும் அழகியாகிய அபிராமி, என்னைத் தன் அன்பர்களில் ஒருவனாகக் கூட்டினாள். என் கொடிய வினைகளை ஓட்டினாள். என்னிடம் ஓடி வந்தாள். தன்னை உள்ளபடி எனக்குக் காட்டினாள். அதைக் கண்ட கண்களும், எண்ணும் மனமும், களிக்கும்படி என்னை ஆட்டிவைக்கும் அபிராமியின் அருள் தான் என்னே!